Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஹம்பாந்தோட்டையில் நிரந்தர கடற்படை முகாம்

ஹம்பாந்தோட்டையில் நிரந்தர கடற்படை முகாம்

சீன நிதி அனுசரணையிலான திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் நிலையில், ஹம்பாந்தோட்டையில் நிரந்தர கடற்படை முகாமொன்றை அமைக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களை தடுத்து வைத்து ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம் குறித்தும் அதன் பின்னர் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பிலும், பிரதமர் ரணில் விக்கிமரசிங்கவிடம், கடற்படை தளபதியினால், நேற்றைய தினம் அறிக்கையொன்று கையளிக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கும் இடையில், அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போதே மேற்படி அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பிரதமர் மேலும் கூறியதாவது,

“கப்பல் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை காரணமாக ஏற்பட்ட தாமதத்துக்காக, கப்பல் நிறுவனத்திடமிருந்து 400 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கட்டணப் பட்டியல் கிடைக்கப்பபெற்றுள்ளது. இந்தத் தொகையை யார் செலுத்துவது? குறித்த கம்பனியுடன் பேசுமாறு அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்.

அதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிரந்தரமாக இருக்கும் வகையில் கடற்படை முகாமொன்றை அமைக்குமாறு, கடற்படை தளபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். இது குறித்து ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரிடமும் பேசினேன். சீன நிறுவனம் உட்பட வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் இந்தக் கோரிக்கையை விடுத்தன.

ஆகவே, ஹம்பாந்தோட்டையில் பாதுகாப்பு கருதி, அங்கு நிரந்தர கடற்படை முகாமொன்று அமைக்கப்படும். மத்தள விமான நிலையத்துக்கு விமானப்படையினரும் அனுப்பிவைக்கப்படுவர். ஜனவரி 7ஆம் திகதி, சீனக் கம்பனியின் கீழ், நிர்வாகம் வரவுள்ளது. துறைமுக அதிகாரச் சபையும் இணைந்து செயற்படும். ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

ஹம்பாந்தோட்டையில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டார் என, தங்காலை பொலிஸ் நிலையத்திலேயே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திலேயே செய்திருக்க வேண்டும் என நான் ஊடக அமைப்புகளிடம் கூறினேன். அத்துடன், பாதுகாப்பு வலயத்துக்குள் ஊடகவியலாளர் அனுமதியின்றி பிரவேசித்தனர் என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்தும் விசாரணை நடத்தப்படும்” எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *