இந்த தொடரின் மூலம் எங்களிற்கு கிடைத்த முக்கிய விடயம் ஹார்டிக் பண்ட்யா – அவர் அணியில் சேர்க்கப்பட்டதும் அவர் விளையாடிய விதமும் என்பது முக்கியமான விடயங்கள் என நான் கருதுகிறேன் என இந்திய அணித்தலைவர் விராட்கோலி தெரிவித்துள்ளார்
இலங்கை அணியை மூன்றாவது டெஸ்டிலும் தோல்வியடையச்செய்து தொடரை வெள்ளையடித்த பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இது எங்களிற்கு சிறந்த வெற்றி,அணி ஓட்டுமொத்தமாக விளையாடி விதம் குறித்து நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன்,இலகுவான வெற்றிகளை பெறுவது நல்ல விடயமே வழமையாக அணியில் இடம்பெறும் வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடியுள்ளனர்.
எனினும் இந்த தொடரின் மூலம் எங்களிற்கு கிடைத்த முக்கிய விடயம் ஹார்டிக் பண்ட்யா அணியில் சேர்க்கப்பட்டதும் அவர் விளையாடிய விதமும் என்பது முக்கியமானது.
பந்து வீசும் போது அவர் வெளிப்படுத்திய நம்பிக்கையும் துடுப்பாட்டத்தின் போது அவர் வெளிப்படுத்திய முதிர்ச்சியும் முக்கியமான விடயங்கள்.இது அணியை மேலும் பலப்படுத்துகின்றது .
நாங்கள் ஓரு இளம் அணி நாங்கள் இன்னமும் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட எதிர்பார்க்கின்றோம்,ஓவ்வொரு டெஸ்ட் போட்டியையும் இதே ஆர்வத்துடன் விளையாட விரும்புகின்றோம்
நாங்கள் போட்டிக்கு முன்னரே எங்களை தயார்படுத்துவதில் அக்கறையாகவுள்ளோம்- வயது எங்கள் அணிக்கு பக்கபலமாக உள்ளது இன்னும் ஐந்து ஆறு வருடங்களிற்கு ஒரே அணியாக விளையாடலாம் என எதிர்பார்க்கின்றோம்.
இலங்கை அணியை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் சிறந்த திறன் உள்ள வீரர்கள்,அவர்கள் ஆஸ்திரேலியாவை வெள்ளையடித்துள்ளனர், ஓரு சில போட்டிகளால் நம்பிக்கையிழக்காமல் நம்பிக்கையை தொடர்ந்தும் தக்கவைப்பதே முக்கியம் எங்கள் அணியை பொறுத்தவரையிலும் கூட அதனையே நம்புகின்றோம்.