ஹியூஸ்டனில் ஹார்வே புயல் தாக்கிய பகுதியில் உள்ள இரசாயன தொழிற்சாலையிலிருந்து பாரிய வெடிப்புச்சத்தங்கள் கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹியூஸ்டனிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ள குரொஸ்பியில் உள்ள இரசாயன தொழிற்சாலையிலேயே இந்த வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
பிரான்ஸை சேர்ந்த ஆர்கெமா என்ற நிறுவனம் இதனை உறுதிசெய்துள்ளது இரு வெடிப்புச்சம்பவங்கள் இடம்பெற்றதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறிப்பிட்ட தொழிற்சாலையில் உள்ள இரசாயனப்பொருட்கள் பாதிக்கப்பட்டால் அவை வெடித்துச்சிதறலாம் என்ற அச்சம் காரணமாக குறிப்பிட்ட தொழிற்சாலை மூடப்பட்டிருந்த நிலையிலேயே இந்த வெடிப்புசம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன
