Search
Wednesday 27 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஹிஸ்புல்லா மீண்டும் எம்.பி.யாகிறார்?

ஹிஸ்புல்லா மீண்டும் எம்.பி.யாகிறார்?

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் பின்னர் அதிலிருந்து இராஜினாமா செய்து கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும் அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து அவரை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இது தொடர்பாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லையென கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *