Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஹெரோயினுடன் சிக்கிய பூனை தப்பியோட்டம்!

ஹெரோயினுடன் சிக்கிய பூனை தப்பியோட்டம்!

சில தினங்களுக்கு முன்னர் ஹெரோயின் போதைப் பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கழுத்தில் கட்டப்பட்டவாறு கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் நுழைந்த போது சிறைச்சாலை அதிகாரிகளிடம் சிக்கிய பூனை பின்னர் அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பூனை பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவிருந்த நிலையில் அங்கு பொலிஸார் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் அந்த பூனை தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலையிலுள்ள அறையொன்றில் அந்த பூனை அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அது தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பூனையின் கழுத்தில் சிறிய பார்ச்ல் ஒன்று இருந்ததுடன் அதனுள் 1.7 கிராம் ஹெரோயினும் 2 சிம் அட்டைகளும் இருந்துள்ளன. இது சிறையிலுள்ள கைதியொருவருக்கு அனுப்புவதற்காக சூட்சுமாக செய்யப்பட்ட ஒன்று என சந்தேகம் எழுந்துள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *