தலைப்பு செய்திகள்

வடமாகாண முதலமைச்சர் கலந்து கொண்ட நிதிசேர் நிகழ்வு அறிக்கை

வடமாகாண முதலமைச்சர் கலந்து கொண்ட நிதிசேர் நிகழ்வு அறிக்கை

கடந்த ஜனவரி மாதம் முற்பகுதியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கனடா சென்றிருந்தபோது அவர் கலந்து கொண்ட நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த கனடியத் தமிழர் சமூக அமையம் அது தொடர்பிலான வரவு செலவு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முற்பகுதியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கனடா வருகை தந்திருந்தார். அவரைக் கனடாவுக்கு வரவழைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளையும் செய்து அதற்குரிய தொடர்புகளையும் நேர்த்தியாக மேற்கொண்டிருந்தது கனடியத் தமிழர் சமூக அமையம் (TCCSF) .

இந்த வரவுசெலவு அறிக்கையின்படி 50150 கனேடிய டொலர்கள் நிதி சேகரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மற்றும் கணக்கு விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் முதலமைச்சரின் நிகழ்வுளைத் திட்டமிட்டுச் சமூகம் சார்ந்து செவ்வனவே நடத்துவதற்காகப் பல அமைப்புகளையும் இணைத்து ஏற்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டது.

அந்த ஏற்பாட்டுக்குழுவில்,

பிரம்டன் தமிழ் ஒன்றியம் (BTA)
டூரம் தமிழ் ஒன்றியம் (DTA)
மார்க்கம் தமிழ் அமைப்பு (MTO)
மிசிசாகா தமிழ் ஒன்றியம் (MTA)
ஒட்டாவா தமிழ் ஒன்றியம் (OTA)
கனடியத் தமிழ் தேசிய அவை (NCCT)
கனடியத் தமிழர் சமூக அமையம் (TCCSF)

ஆகிய அமைப்புகள் அங்கம் பெற்றிருந்தன. சில அமைப்புகள் பெயர் சுட்டி அங்கம் பெறாது மிகுந்த அர்ப்பணிப்புடன் கை கோர்த்துப் பணியாற்றின. ஒரு சில அமைப்புகள் அங்கம் பெற மறுத்திருந்தன.

முதல்வரின் வருகையின் போது முக்கிய நிகழ்வாகத் தாயத்துக்கு உதவும் நோக்குடன் முதல்வருடான மாலை நிதி சேகரிப்பு நிகழ்ச்சியை கனடியத் தமிழர் சமூக அமையமும் கனடியத் தமிழ் தேசிய அவையும் இணைந்து, முன்னின்று அத்துடன் ஏற்பாட்டுக் குழுவினரின் ஓத்துழைப்புடனும் நடாத்தியிருந்தனர். அந்த நிகழ்வின் வரவுசெலவுக் கணக்குகள் யாவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என முதல்வர் தரப்பும் நாமும் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருந்தோம்..

நிகழ்வு நடந்து முடிந்த சில வாரங்களுக்குள்ளேயே இந்த நிகழ்வு பற்றிய வரவுசெலவுக் கணக்குகள் வெளிவந்திருக்க வேண்டும். விற்கப்பட்ட சீட்டு விபரங்களைப் பெறுவதிலும் பணத்தைச் சேகரிப்பதிலும் ஏற்பட்ட காலதாமதம் கணக்கு விபர வெளியீட்டைப் பின்தள்ளி விட்டது.

அதற்காக கனடியத் தமிழர் சமூக அமையம்(TCCSF) அனைவரிடமும் மன்னிப்புக் கோருகின்றது.

ஏற்பாட்டுக்குழுவினதும் மற்றும் பலரதும் பார்வைக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் இந்தக் வரவுசெலவு விபரங்களை வெளியிடுவதில் ஏற்பாட்டுக்குழுவின் சக அமைப்புகளுடன் கனடியத் தமிழர் சமூகம் பெரும் நிறைவடைகின்றது.

இது தொடர்பாக மேலதிக விபரங்களைப் பெற விரும்பினால் கனடியத் தமிழர் சமூக அமையத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

முதல்வரின் வருகையும் இந்த நிதி சேகரிப்பு நிகழ்வும் வெற்றிபெற உதவிய அனைவருக்கும் எமது நன்றி.

கனடியத் தமிழர் சமூக அமையம்.(TCCSF)

GDE Error: Error retrieving file - if necessary turn off error checking (0:)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *