Search
Saturday 16 December 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

 நாளை யாழ். பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா

 நாளை யாழ். பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா

யாழ்.பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி நாளைகாலை 9 மணி முதல் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்முறை இரண்டு பகுதிகளாக நடத்தப்படவுள்ளன. முதலாவது அமர்வு நாளை வெள்ளிக்கிழமையும், இரண்டாவது அமர்வு எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதமும் நடத்தப்படும். இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப் படிப்புகள் பீடம், முகாமைத்துவ வணிக பீடம், கலைப்பீட சட்டத்துறை, விவசாய பீடம், மருத்துவ பீடத்தின் இணை மருத்துவ அலகு, சித்த மருத்துவத் துறை, வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம், வணிக கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 816 பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளதாகவும் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர் இ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *