Search
Thursday 13 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

1000ரூபா சம்பளத்தை வழங்கவே முடியாது! முதலாளிமார் சம்மேளனம்

1000ரூபா சம்பளத்தை வழங்கவே முடியாது! முதலாளிமார் சம்மேளனம்

1000 ரூபா சம்பள அதிகரிப்பை கோரி பெருந் தோட்ட தொழிலாளர்கள் மலையகமெங்கும் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தங்களால் அந்த சம்பள அதிகரிப்பை வழங்கவே முடியாது என முதலாளிமார் சம்மேளனத்தினர் அறிவித்துள்ளனர்.
கூட்டு ஒப்பந்தம் காலாவதியாக 2 மாதங்கள் கடந்துள்ள போதும் இன்னும் அந்த ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு என்ற கோரிக்கையில் விடாப்பிடியாக இருக்கின்றன. எவ்வாறாயினும் தங்களால் அவ்வாறாக சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என தொடர்ந்தும் முதலாளிமார் சம்மேளனத்தினர் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தோட்டப் பகுதியில் தொழிலாளர்கள் தமது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன்படி பல தோட்டங்களில் அது தொடர் வேலை நிறுத்தப் போராட்டமாகவும் மாறியுள்ளன. ஆனபோதும் தங்களால் 1000 ரூபா சம்பளத்தை வழங்கவே முடியாது என மீண்டும் முதலாளிமார் சம்மேளகத்தினர் இன்றைய தினமும் அறிவித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *