Search
Friday 25 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

1000 ரூபா சம்பளம்! ஒப்பந்தம் இன்று ஏன் கைச்சாத்தாகவில்லை : ரமேஷ்வரன் விளக்கம்

1000 ரூபா சம்பளம்! ஒப்பந்தம் இன்று ஏன் கைச்சாத்தாகவில்லை : ரமேஷ்வரன் விளக்கம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்றைய தினம் கைச்சாத்திடப்படவிருந்த நிலையில் அது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏன் இவ்வாறாக ஒத்தி வைக்கப்பட்டது என தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான மருதபாண்டி ரமேஷ் தெரிவித்துள்ளதாவது,
ஒப்பந்தத்தில் சில சரத்துகளில் மாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.பெருந்தோட்ட மக்களின் நன்மை கருதியே இவ்வாறு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அச்சரத்துக்கள் மாற்றியமைத்த பின்னர் மீண்டும் முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.இது சம்பந்தமாக பலர் உண்மைக்கு புறம்பான தகவல்களை மக்களிடத்தில் சேர்க்க முனைவார்கள். எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை.மார்ச் முதலாம் திகதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பளம் நிச்சயம் கிடைக்கும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *