Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

12,985 வாக்களிப்பு நிலையங்கள் தயார் நிலையில் : 80 வீத வாக்குப் பதிவை எதிர்பார்க்கின்றோம் : என்கிறார் தேசப்பிரிய

12,985 வாக்களிப்பு நிலையங்கள் தயார் நிலையில் : 80 வீத வாக்குப் பதிவை எதிர்பார்க்கின்றோம் : என்கிறார் தேசப்பிரிய

நாளை மறுதினம் நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் 12,985 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் வாக்களிப்புகள் நடக்கவுள்ளன. இந்த நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் நாளை முற்பகல் முதல் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 62 இலட்சத்து 63ஆயிரத்து 855 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்களில் ஒரு கோடியே 30இலட்சம் பேராவது வாக்களிப்பர் என எதிர்பார்ப்பதாகவும் இதன்படி 80 வீத வாக்களிப்பு பதிவாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தலுக்காக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அசம்பாவிதங்கள் நடக்கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ள சில பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் ஏதேனும் வாக்களிப்பு நிலையத்தில் அசம்பாவிதம் நடந்தால் அந்த நிலையத்தின் வாக்களிப்பை நிறுத்தி மீண்டும் நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் நடவடிக்கையில் பொலிஸாரும் , சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எந்த வகையிலும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வாக்களிப்பு நிலையத்தில் தேவையான சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் 100 வீதம் கொரோனா வைரஸ் தொற்று அற்ற வாக்களிப்பு நிலையமாக இவை இருக்குமெனவும் இதனால் மக்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.  –(3)

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *