Search
Monday 17 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

15 வயதின் கீழ் தேசிய கால்பந்து அணியில் யாழ் வீராங்கனைகள்

15 வயதின் கீழ் தேசிய கால்பந்து அணியில்  யாழ் வீராங்கனைகள்

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின், 15 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் சம்பியன்ஷிப் தொடர் பூட்டான் தலைநகர் திம்புவில்நடைபெறவுள்ளது.போட்டித் தொடருக்காக 7ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்ட இலங்கை அணி, தங்களுடைய முதல் குழுநிலைப் போட்டியில், இன்று 9ஆம் திகதி இந்திய அணியை எதிர்கொள்கிறது. பின்னர், 11ஆம் திகதி பூட்டான் அணியை எதிர்த்தாடவுள்ளது. இந்த நிலையில், தொடருக்கு செல்லவுள்ள 23 பேர்கொண்ட குழாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரங்களை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த முன்கள வீராங்கனைகளான ரகுதாஸ் கிருஷாந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா மற்றும் பின்கள வீராங்கனையான பாஸ்கரன் செயந்தினி ஆகியோரும், மகாஜனக் கல்லூரியின் பின்கள வீராங்கனையான எஸ்.தேவப்பிரியா, மத்தியகள வீராங்கனை யு.ஜோகிதா மற்றும் கோல் காப்பாளரான ஜெகநாதன் ஜெதுன்சிகா ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *