Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

16 வயது மாணவனும் 15 வயது மாணவியும் பெற்றோர் முன்னிலையில் தற்கொலை

16 வயது மாணவனும் 15 வயது மாணவியும் பெற்றோர் முன்னிலையில் தற்கொலை

கடுகஸ்தோட்டை பிரதேசத்தில் பொல்கொல்ல நவயாலதென்ன ரயில் பாலத்திலில் இருந்து பொல்கொல்ல நீர்தேக்கத்திற்குள் பாய்ந்து 16 வயது மாணவன் ஒருவருவரும் 15 வயது மாணவி ஒருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
10 மற்றும் 11ஆம் தரங்களில் வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி கற்றும் இருவரே இவ்வாறாக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் காதல் விவகாரத்தாலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை முதல் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறியிருந்த நிலையில் இருவீட்டாரும் இவர்களை தேடி வந்துள்ளனர். இதன்படி இன்று அதிகாலை இவர்கள் காணமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் இவ்வேளையில் இவர்கள் குறித்த பாலத்தின் மீது இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது அவர்களின் பெற்றோர் உடனடியாக அந்த இடத்திற்கு சென்ற போது அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு அந்த பாலத்தில் இருந்து குதித்துள்ளதாகவும் இதன்பின்னர் நீர்த்தேக்கத்தில் இருந்து இருவரும் சடலமாகவே மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *