Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மட்டக்களப்பில் தமிழர் காணிகளை முஸ்லிம்கள் கூடுதல் விலைக்கு வாங்குகின்றனர் : விக்னேஸ்வரன் கவலை

மட்டக்களப்பில் தமிழர் காணிகளை முஸ்லிம்கள் கூடுதல் விலைக்கு வாங்குகின்றனர் : விக்னேஸ்வரன் கவலை

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்வதாக மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி கிராமத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தும் வகையிலும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையிலும் மக்கள் சந்திப்பு பாலர் பாடசாலைக்கட்டடத்தில் நேற்று 21.07.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் சென்ற இடங்களிலெல்லாம் காணிகள், பெண்கள், உரித்துக்கள் பறிபோகின்றது. இதற்கு காரணமாக முஸ்லிம்கள் இருப்பதாக மக்களால் என்னிடம் கூறப்பட்டது. அதாவது, குறைந்த விலையுள்ள காணிகளை கூடிய விலை கொடுத்து வாங்குவதாகக் கூறப்படுகின்றது.

எமது மக்கள் ஏதோவொரு காரணத்திற்காக விற்பனை செய்து விட்டுச்சென்றார்கள் என்றால், அந்த இடத்தில் வந்து முஸ்லிம்கள் குடியிருப்பார்கள். வறுமையின் காரணமாக எமது பெண்கள் மதம் மாறுவது பிரச்சனையாகவுள்ளது. இதனால் எமது உரித்துக்கள் பறி போகின்றது.

இவற்றுக்கெல்லாம் எவ்வாறு முகங்கொடுக்க வேண்டுமென்பது கேள்விக்குறியாகவுள்ளது. நாங்கள் எங்களைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் பலமாக இருந்தால், எங்கள் பெண்கள் வெளியில் போகமாட்டார்கள். எங்களது காணிகளை மற்றவர்கள் கொள்வனவு செய்வதற்கு அவசியமிருக்காது.

ஏனெனில், நாம் பொருளாதார ரீதியாக நல்ல நிலைமைக்கு வந்தால், எமது காணிகளை விற்பனை செய்ய வேண்டிய அவசியமிருக்காது. ஏழ்மை, வசதியற்ற நிலையில் இருந்தோமானால், மற்றவர்களின் சதிக்குள் விழ வேண்டிய நிலை வரும். தங்கள் வாழ்க்கை நிலைமையை மாற்ற சகலதையும் செய்ய வேண்டும். உங்கள் கிராமத்தை முன்னேற்ற நீங்கள் முன்வர வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக எங்களால் முடியுமென்ற நம்பிக்கை வர வேண்டும். புதிய வாழ்க்கையைக் கொண்டு வரவுள்ளோம் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்க வேண்டும். அதோடு, பொறுமையும் இருக்க வேண்டும். எங்களுடைய கனிய வளங்களைப் பெறுவதற்காக மக்களிடம் பல பொய்களைக்கூறி வளத்தினைப் பெற்றுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

எனவே, இதனை எவ்வாறு தடை செய்யலாம்? இதற்கு என்ன நடவடிக்கையெடுக்கலாம்? இதனைப்பாதுக்காக என்ன செய்ய வேண்டுமென்று பல கோணங்களிலிருந்து பார்க்க வேண்டிய அவசியமுள்ளது.

வட கிழக்கு மாகாணத்திலுள்ள எமது தமிழ் மக்களின் நிலை கேள்விக்குறியாகவுள்ளது. எல்லாம் போய் விட்டது. இனி என்ன நடக்கப் போகின்றதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் உள்ளதை நான் காண்கின்றேன். எங்களை நாங்களே பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களிடமுள்ளது என்றார்.

01-5-3 01-7-4 01-8-4


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *