Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

18 வருடங்களுக்கு பின்னர் வவுனியா இராசேந்திரங்குளத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றம்

18 வருடங்களுக்கு பின்னர் வவுனியா இராசேந்திரங்குளத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றம்

18 வருடங்களுக்கு பின்னர் வவுனியா இராசேந்திரங்குளம் பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இராணுவ முகாமைச் சூழ அமைக்கப்பட்டிருந்த முற்கம்பி வேலிகள் மற்றும் இராணுவத்தின்கட்டடங்கள், தளபாடங்களை அகற்றும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

யுத்தம் நடைபெற்ற போது 1998 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த இராணுவ முகாம் இதுவரை இயங்கி வந்த நிலையில் தற்போது பம்பைமடு இராணுவ முகாமுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இவ் இராணுவ முகாம் செட்டிகுளம் செல்வதற்கான வீரபுரம் ஊடான போக்குவரத்து பாதையின் சோதனை சாவடியாகவும் முன்னர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_1013

IMG_1006N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *