Search
Monday 22 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

19ஐ இரத்து செய்வதற்காக நீதிமன்றம் செல்ல தயாராகும் மகிந்த அணி

19ஐ இரத்து செய்வதற்காக நீதிமன்றம் செல்ல தயாராகும் மகிந்த அணி

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு மகிந்த அணி திட்டமிட்டுள்ளது.
அந்த திருத்தத்தில் சில விடயங்கள் நிறைவேற்றிய முறைமை தொடர்பாக சிக்கல்கள் காணப்படுவதாகவும் இதனால் அதனை இரத்து செய்ய வேண்டுமெனவும் அவர்கள் நீதிமன்றத்தை கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
19ஆவது திருத்தத்தை இல்லாது செய்ய நீதிமன்றம் உத்தரவிடுமாக இருந்தால் மகிந்த ராஜபக்‌ஷவையே மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக்க முடியுமென யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்கள் இவ்வாறான முயற்சியை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் 19ஆவது திருத்தத்தை இல்லாது செய்வதற்காக நீதிமன்றத்திற்கு செல்வது தொடர்பாக ஜீ.எல்.பீரிஸ் கருத்து தெரிவித்திருந்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *