தலைப்பு செய்திகள்

195 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வவுனியா பேரூந்து நிலையம் மூடப்பட்ட நிலை: இளைஞர்கள் விசனம்

195 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வவுனியா பேரூந்து நிலையம் மூடப்பட்ட நிலை: இளைஞர்கள் விசனம்

வவுனியாவில் 195 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைந்துள்ள புதிய பேரூந்து நிலையம் கடந்த 3 மாதங்களாக செயற்பாடாமை தொடர்பாக இளைஞர்குழுவொன்றுக்கும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்குமிடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், யுவதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட வவுனியா யாழ் வீதியில் அமைந்துள்ள புதிய பேரூந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடிசில்வா மற்றும் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரனினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் மக்கள் பிரதிநிதியை சந்தித்து பேரூந்து நிலையம் திறக்கப்படாமை தொடர்பாக இக் குழு கலந்துரையாடிருந்தது. இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்து தெரிவிக்கையில்,

மத்திய மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சுகள் இது தொடர்பாக கவனம் செலுத்தவேண்டிய தேவையுள்ளது. இணைந்த நேர அட்டவணையொன்றினை ஏற்படுத்துவது தொடர்பில் உள்ள சிக்கல் நிலையால் கடந்த 3 மாதமாக திறக்கப்படாமல் உள்ளது. எனவே இது தொடர்பில் அபிவிருத்திகுழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

IMG_2634

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *