Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2 ஆவது நாளாக தொடரும் அத்துரலிய ரத்தன தேரரின் உண்ணாவிரத போராட்டம் : ஆதரவு வலுக்கிறது

2 ஆவது நாளாக  தொடரும் அத்துரலிய ரத்தன தேரரின் உண்ணாவிரத போராட்டம் : ஆதரவு வலுக்கிறது

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் சனிக்கிழமை) தொடரும் வேளையில் அவரது போராட்டத்துக்கான ஆதரவு நாடளாவிய ரீதியில் வலுப்பெற்று வருகிறது.

கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக, அதுரலிய ரத்தன தேரர் நேற்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

புத்த பிக்குகள் உட்பட சமாதானத்தை விரும்பும் சகல மக்களும் அதுரலிய ரத்தனரின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று தேசிய சங்க சம்மேளன தலைவர் லியன்வல சாசனரத்ன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *