Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2 மாதங்களாக பாதுகாப்பு சபையை கூட்டாதது பாரிய தவறே : மகிந்த

2 மாதங்களாக பாதுகாப்பு சபையை கூட்டாதது பாரிய தவறே : மகிந்த

2 மாதங்களாக பாதுகாப்பு சபையை கூட்டாதிருந்தமை பாரிய தவறாகுமென எதிர்க்கட்சி தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
தங்காலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எங்களின் காலத்தில் வாரத்திற்கு ஒரு தடவை பாதுகாப்பு சபையை கூட்டினோம். அதனாலேயே எங்களால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது. யுத்தத்தின் பினரும் நாங்கள் வாராந்தம் கூடினோம். அதனாலேயே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினோம். பாதுகாப்பு சபை 2 மாதங்களாக கூட்டப்படாமைக்கு அதன் அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *