Search
Monday 26 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

20வது திருத்தம் மீதான பாராளுமன்ற விவாதம் 21ஆம் 22ஆம் திகதிகளில்

20வது திருத்தம் மீதான பாராளுமன்ற விவாதம் 21ஆம் 22ஆம் திகதிகளில்

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை எதிர்வரும் 21ஆம் 22ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள இன்று (16) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் 20வது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி சபாநாயகரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் ஒக்டோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30 மணிவரை பாராளுமன்ற விவாதத்தை நடத்துவதற்கும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஒக்டோபர் 22ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு விவாதம் முடிவடைந்ததும் குழு நிலை ஆரம்பிக்கப்படும்.
இந்த இரண்டு தினங்களும் பாராளுமன்ற ஆரம்பத்தின் போது இடம்பெறும் வாய்மூல விடைக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் கேள்விகள் இடம்பெறாது என்பதுடன், மதிய போசனத்துக்காக விவாதம் இடைநிறுத்தப்படாது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *