Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

”20 ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் தொடர்பாக யாரும் அச்சமடைய வேண்டாம்” – நீதி அமைச்சர்

”20 ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் தொடர்பாக யாரும் அச்சமடைய வேண்டாம்” –  நீதி அமைச்சர்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புக்கு அப்பாலான எந்தவொரு அதிகாரத்தையும் ஜனாதிபதிக்கு வழங்காது என்றும், அதிகமான அதிகாரங்கள் வழங்கப்படுவதால் ஜனாதிபதி சர்வாதிகாரியாக மாறி விடுவார் என்று யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று 20 ஆவது திருத்தம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் குறிப்பிடுகையில்,
உயர்நீதிமன்றம் 20 ஆவது திருத்தம் தொடர்பாக வழங்கியுள்ள பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு அதில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி 20 ஆவது திருத்தத்தின் 5ஆவது சரத்தின்படி ஜனாதிபதியினால் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்துக்கு செல்ல முடியும் என திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒருவருட காலப்பகுதியில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்குவதாக 20 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், பாராளமன்றத்தை இரண்டரை வருடத்தில் கலைப்பதற்கும், அது சார்ந்த தீர்மானங்களை ஜனாதிபதியினால் முன்னெடுக்க முடியுமெனவும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு அமைவாக 22 ஆவது சரத்தினை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைவாகவும், தேர்தல் சட்டத்திற்கு அமைவாகவும் ஜனாதிபதியினால் தீர்மானங்கள் மேற்கொள்ள முடியுமென மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 20 ஆவது திருத்தத்தில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை விடவும் அதிகமான அதிகாரங்கள் எதுவும் கிடையாது. அத்துடன் 18 ஆவது திருத்தத்தை விடவும் குறைந்த அதிகாரங்களே வழங்கப்படும். அதிகமான அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்றது என்பது தொடர்பாக யாரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தக் கூடிய ஏற்பாடுகளும் திருத்தத்தில் உள்ளது. இதனால் யாரும் அச்சமடைய தேவையில்லை. இதில் நாட்டுக்கு பாதிப்பான எந்தவித விடயங்களும் கிடையாது என்றார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *