Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2011 உலக கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயசதி நடந்ததா? விசாரணைக்கு கோரிக்கை

2011 உலக கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயசதி நடந்ததா? விசாரணைக்கு கோரிக்கை

2011 உலக கிண்ண கிரிக்கெட்டி இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியின் போது ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தனந்த அலுத்கமகேவினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபையும் விளையாட்டுத்துறை அமைச்சும் முறையான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிலவித்துள்ளார்.
தனது டுவிற்றர் பக்கத்தில் நாமல் ராஜபக்‌ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இது தொடர்பாக மகிந்தனந்த அலுத்கமகேவிடம் இருக்கும் சாட்சியங்களை கிரிக்கெட் சபையிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக மஹேல ஜயவர்தனவும் தனது டுவிற்றர் பக்கத்தில் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆரம்பித்துள்ளதால் சர்க்கஸ் செயற்பாடுகளும் ஆரம்பிக்கின்றதா? எனவும் அதற்கான சாட்சிகள் இருக்கின்றதா? எனவும் குறிப்பிட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *