Search
Saturday 16 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

208 கோடி ரூபாவில் மகிந்தவுக்கு வாங்கப்பட விமானம்: மைத்திரி நிறுத்தினார்

208 கோடி ரூபாவில் மகிந்தவுக்கு வாங்கப்பட விமானம்: மைத்திரி நிறுத்தினார்

மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்தபோது தன்னுடைய தனிப்பட்ட பாவனைக்காகவென என வாங்குவதற்காக பணம் செலுத்தப்படவிருந்த விமானத கொள்வனவு உத்தரவை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரி உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணம் அரசாங்க திறைசேரி மூலமாகஏற்கனவே  செலுத்தப்படவிருந்த நிலையில்தான் இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி மட்டும் பயன்படுத்துவதற்காக இந்த விமானம் அடுத்த மாதம் இலங்கைக்குக் கொண்டுவரப்படவிருந்தது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 16 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிலேயே இந்த விமானம் கொண்டுவரப்படவிருந்தது. இதன் இலங்கை பெறுமதி 208 கோடி ரூபாவாகும்.

இதற்காக திறைச்சேரியின் ஊடாகவே பணம் செலுத்தப்படவிருந்தது. எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி அந்த விமானக் கொள்வனவை நிறுத்தியதுடன் அந்த பணத்தை மக்களின் நலன்புரிகளுக்காக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *