Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

28 அமைச்சுகள் , 40 இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது

28 அமைச்சுகள் , 40 இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயங்கள் வர்த்தமானியில்  அறிவிக்கப்பட்டது

28 அமைச்சுகளுக்கும் 40 இராஜாங்க அமைச்சுகளுக்கும் என ஒதுக்கப்பட்டுள்ள விடயங்கள்,சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச் சட்டநிறுவனங்கள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையை அமைக்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கைப் பொறுப்புகள் மற்றும் பணிகள் கருத்தில்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சுக்கும் உரிய விரிவான பணிகளுக்கேற்ப முன்னுரிமையை வழங்குதல் மற்றும் குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அமைச்சுக் கட்டமைப்பை வகுக்கும்போது தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பின் மூலம் கிராமிய, விவசாய அபிவிருத்தி மற்றும் கல்வித்துறையின் பல்வேறு துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அமைச்சுக்குமான விடயங்கள், முன்னுரிமைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சட்ட அமைப்பு பற்றி உப தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் கண்டியில் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *