தலைப்பு செய்திகள்

50 வருட பழமையான இளவம் பஞ்சு மரம் வீழந்து இரு வீடுகள் சேதம்

50 வருட பழமையான இளவம் பஞ்சு மரம் வீழந்து இரு வீடுகள் சேதம்

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் சின்ன வேவாகொல பகுதியில் நேற்று முன்தினம்  மாலை சுமார் 50 வருடத்திற்கு மேல் பழமையான இளவம் பஞ்சு மரம் வீழ்ந்து இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஒரு சிறுமி உட்பட இரண்டு பேர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இம்மரம் வீழ்ந்ததில் மின் கம்பிகள் சேதமாகியதனால் பிரதேசத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.

வீடுகளின் பாதுகாப்பு கருதி இம்மரத்தினை வெட்டி அகற்ற முற்பட்ட வேளையிலேயே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது. அனர்த்தத்தின் போது வீட்டில் உள்ளவர்கள் வெளியில் ஓடி உயிர் தப்பியுள்ளனர்.

இம்மரம் வீழ்ந்ததில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இவ்வனர்த்தத்தினால் வீட்டில் இருந்த தளபாடங்களுக்கு சேதமேற்பட்டுள்ளது.DSC02406

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *