Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

”5000 ரூபாக்கு என்னாச்சி?” கொட்டகலையில் மக்களிடம் தமிழில் கேட்ட மகிந்த

”5000 ரூபாக்கு என்னாச்சி?” கொட்டகலையில் மக்களிடம் தமிழில் கேட்ட மகிந்த

மலையக மக்களின் பிரச்சினைகளை எமது ஆட்சியில் தீர்த்து வைப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கொட்டகலையில் நடைபெற்ற பிரசார கூட்டத்திலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”என்னாச்சி 5000 ரூபாவுக்கு” என தமிழில் கூறி பேச்சை ஆரம்பித்தார். இதன்போது எனது காலத்திலேயே தோட்ட மக்களுக்காக வேலை செய்தோம். தோட்டப்பகுதியில் வீதியொன்று அமைக்கப்படுகின்றதாக இருந்தால் , வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படுகின்றதென்றால் அது எங்கள் ஆட்சியிலேயே நடந்தது. வீடுகளையும் நாங்களே அமைத்தோம். அந்த வேலைத்தை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்போம். சம்பளம் , பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக நாங்கள் பொறுப்பு கூறுவோம்.
நீங்கள் பெற்ற கஸ்டங்கள் போதும் , உங்கள் பிரச்சினைகளை தீர்ப்போம். நான் உங்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவேன். நிவாரண பொதிகளை வழங்குவேன் , இது நிச்சயம் நடக்கும். நான் செய்வதை சொல்வேன். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *