Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

5000 ரூபாவை வழங்க எந்த தடையும் கிடையாது

5000 ரூபாவை வழங்க எந்த தடையும் கிடையாது

தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா தீபவளி கொடுப்பனவை வழங்குவதற்கு எந்த தடையும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜினால் அது தொடர்பாக கேட்கப்பட்ட போதே ஆணைக்குழு தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
5000 ரூபாவை கடித உரைக்குள் வைத்து கொடுக்க முடியாது. ஒரு தடவை வெற்றிலையில் வைத்து வழங்கிய சம்பவமும் நடந்துள்ளது. இதனால் அவ்வாறு வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கூறியுள்ளார்.
அதன்போது அந்த விடயம் தொடர்பாக நிர்வாகமே அதனை வழங்குவதால் இவ்வாறான பிரச்சினைகள் வராது என திலகராஜ் எம்.பி தெரிவித்துள்ள நிலையில் அப்படி வழங்குவதற்கு எந்த தடையும் கிடையாது. அதனை வழங்கலாம் என ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *