Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

556 இராணுவத்தினர் கைது

556 இராணுவத்தினர் கைது

இராணுவத்திலிருந்து விடுமுறையில் சென்று சேவைக்கு திருப்பாது தலைமறைவாக இருந்து வந்த 556 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெடட் நிலை அதிகாரியொருவரும் இதில் உள்ளடங்குவதாக இராணுவ பேச்சாளர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
விடுமுறையில் சென்று நீண்ட காலமாக சேவைக்கு திரும்பாத மற்றும் சட்டப் பூர்வமாக சேவையில் இருந்து விலகாது தலைமறைவாக இருக்கும் இராணுவத்தினருக்காக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இம்மாதம் 23ஆம் திகதி வரை ஒரு மாத காலம் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி இந்த காலப்பகுதியில் 11,232 பேர் சரணடைந்து சட்டப் பூர்வமாக சேவையிலிருந்து விலகியுள்ளனர். எவ்வாறாயினும் மேலும் ஆயிரக்கணக்காவர்கள் தலைமறைவாக இருந்து வருவதாகவும் அவர்களை தேடி தொடர்ந்தும் தேடுதல் நடத்தப்படுவதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *