Search
Tuesday 18 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

6 வருடங்களுக்கு என்றே ஜனாதிபதியாக மைத்திரி பதவியேற்றார் : சட்டமா அதிபர் விளக்கம்

6 வருடங்களுக்கு என்றே ஜனாதிபதியாக மைத்திரி பதவியேற்றார் : சட்டமா அதிபர் விளக்கம்

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி 2015 ஜனவரி 9ஆம் திகதி 6 வருடங்களுக்கு பதவியில் இருக்கும் வகையிலேயே பதவியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இதனால் 19ஆவது திருத்தத்தின் கீழ் 5 வருடங்கள் பதவிக்காலம் தற்போதைய ஜனாதிபதிக்கு பொறுந்தாது எனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதுவரை பதவியில் இருக்க முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கோரப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஆராயப்பட்ட போதே சட்டமா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாத்தினரால் தொடர்ந்தும் அது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *