செய்திகள்

700 ரூபாவை தான் வாங்கிக் கொடுக்க முடிந்தது : தொண்டமான் கைவிரிப்பு – VIDEO

700 ரூபா தான் என்னால் வாங்கிக்கொடுக்க முடியும் இதற்கும் மேல் யாருக்காவது வாங்கிக் கொடுக்க முடியுமென்றால் அவர்களுக்கு உதவ தயார் என இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 மாதங்களாக சம்பள பேச்சுவார்த்தை இழுபரியில் போனது. ஆனால் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. 1000 ரூபா சம்பளத்தை கேட்ட போதும் 855 ரூபாவை பெற்றுள்ளோம். அடிப்படை சம்பளம் 200 ரூபால் அதிகரித்துள்ளது. அத்துடன் மற்றைய கொடுப்பனவுகள் அடங்களாக 855 ரூபா கொடுக்கப்படவுள்ளது.
நாங்கள் முடிந்தளவுக்கு சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம். இதனை விடவும் கூட வாங்கிக்கொடுக்க எவருக்கேனும் முடியுமென்றால் அவர்களுக்கு தான் பூரண ஒத்துழைப்பை வழங்க தயார். என அவர் தெரிவித்துள்ளார். -(3)