Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

7000 முஸ்லிம் குடும்பங்கள் இலங்கையிலிருந்து வெளியேற தூதரகமொன்றில் விண்ணப்பம்?

7000 முஸ்லிம் குடும்பங்கள் இலங்கையிலிருந்து வெளியேற தூதரகமொன்றில் விண்ணப்பம்?

இலங்கையை விட்டும் வெளியேறுவதற்காக சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள் வரையில் வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து, நேற்று வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊரான காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில், ஜும்மா தொழுகைக்கு பின்னர் அவர் உரையாற்றுகையில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *