Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

95 வீதம் பயனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

95 வீதம் பயனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

95 வீதம் பயனளிக்க கூடிய கொவிட் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் மொடேர்னா மருந்து உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் 30,000 கொரோனா தொற்றாளர்களிடம் இதனை பரிசோதித்துள்ளதாகவும் இதன்போது அது 95 வீதம் பயனளிக்கக் கூடியதாக இருந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக நம்பிக்கை தரக் கூடியதாக இருப்பதாகவும், இதனை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தி விரைவில் மக்களுக்கு வழங்க முடியுமாக இருக்குமென்று கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அமெரிக்காவில் 20 மில்லியன் பேருக்கு இதனை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *