தலைப்பு செய்திகள்

BNM கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி

BNM கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி

தலவாக்கலை பெயாவெல் தோட்ட ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலக கட்டுமான பணிகளுக்கு நிதி சேகரிக்கும் வகையில் பெயாவெல் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்துள்ள அணிக்கு 7 பேர் கொண்ட BNM கிண்ணத்திற்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி வத்தளை சாகர மைதானத்தில் நடைபெறவுள்ளது.
7ஆம் திகதி காலை 8 மணி முதல் நடைபெறவுள்ள இந்த போட்டியில் பெருந்திரளான அணிகள் கலந்துக்கொள்ளவுள்ளன.
இந்த போட்டிக்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான மேலதிக தகவல்களை 0777-119094 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *