Search
Wednesday 21 August 2019
  • :
  • :
[video width="848" height="272" mp4="http://www.samakalam.com/wp-content/uploads/2016/05/Mewfashions.mp4"][/video]
தலைப்பு செய்திகள்

மூட்டுவாத சத்திர சிகிற்சை என்றால் என்ன? எப்படி அது நடைபெறுகிறது? இந்த வீடியோவை பாருங்கள்

மூட்டுவாத சத்திர சிகிற்சை என்றால் என்ன? எப்படி அது நடைபெறுகிறது? இந்த வீடியோவை பாருங்கள்

மூட்டுவாதம் உங்கள் முழங்காலில் மோசமான வலியை ஏற்ப்படுத்தக்கூடியது. வயது போதல் மற்றும் விபத்து காயங்களால் முழங்கால் பாதிப்படையலாம். இதனால் ஏற்படும் வலி இலகுவான வேலைகளை செய்வதற்கு கூட இயலாமையை ஏற்படுத்தும். ஆனால் சத்திர சிகிற்சை மூலம் இதனை குணப்படுத்தலாம். பாதிப்படைந்த முழங்கால் பகுதிகளை செயற்கையான கூறுகள் மூலம் பதிலீடு செய்வதன் மூலம் இந்த சத்திரசிகிற்சை மேற்கொள்ளப்படுகிறது.

இதோ அந்த படிமுறைகள்:
1. முழங்காலின் பாதிக்கப்பட்ட பகுதிகள் அகற்றப்படுகின்றன.
2. செயற்கையான கூறுகளை பதிலீடுசெய்யும் பொருட்டு எலும்பில் துளை இடப்படுகிறது.
3. முழங்காலை மடக்குவத்ற்கான செயற்கையான பகுதி (வீடியோவை பார்க்க) கீழ்க்கால் எலும்பில் இணைக்கப்படுகிறது.

4. தொடைக்குரிய பகுதி மற்றும் ஒரு இடைவெளி விடுவதற்க்கான பிளாஸ்ரிக் கருவி ஆகியவை இணைக்கப்படுகின்றன.

5. முழங்காலுக்கு ஏற்ப சில்லெலும்பு சரி செய்யப்பட்டு இணைக்கப்படுகிறது.

இதன் பின்னர் எலும்பு குணமடைவதுடன் முழங்கால் பதிலீட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கடினமடைகிறது. பூரணமாக குணமடைய 3 மாதங்கள் எடுக்கலாம். ஆனால் இந்த முழங்கால் மாற்றீடு 25 வருடங்களுக்கு மேல் பயன்படக்கூடியது.

செயற்கையான இந்த முழங்காலுடன் நோயாளிகள் உடற்பயிற்சிகளில் கூட ஈடுபடலாம்.

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *