Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குருதிக்கொடை வழங்கல் நிகழ்வும், மருத்துவமுகாமும் நேற்று திங்கள் கிழமை நடைபெற்றது.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் குருதிக்கொடை நிகழ்வும், மருத்துவ முகாமும் நடைபெற்றது.

ஆரம்ப விழாவில் விருந்தினர்களாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும் பாடசாலையின் பழைய மாணவருமாகிய வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன், பாடசாலையின் பழைய மாணவனும் உளநல மருத்துவருமாகிய வைத்தியர் சி.சுதாகரன், வடக்கு கல்விவலய ஓமந்தை கோட்டக்கல்வி அதிகாரி தா.அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாடசாலையின் அதிபர் சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண சுகாதார அமைச்சர் பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இவ்வாறான சமூகபணியொன்றினை ஒழுங்கு செய்தமைக்காக பாடசாலை பழைய மாணவர் சங்கத்திற்கும், பாடசாலை நிர்வாகத்தினருக்கு பாராட்டுதல்களை தெரிவித்தார். அத்தோடு இலங்கையின் சுகாதார துறை ஏனைய தென்கிழக்காசிய நாடுகளின் ஒப்பிடுகையில் தாரான சேவையை வழங்கி வருவதாகவும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்தினாலும் தொற்றாத நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவதாகவும் தெரிவித்தார். இவ்வாறாக தொற்றாத நோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கு தொழிநுட்பசாதனங்களின் அதிகூடியபாவனையும் காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் இன்று இலங்கையில் அதிகளவிலான மரணங்கள் தொற்றா நோய்களின் தாக்கத்தினாலும் விபத்துக்களினாலும் நடைபெறுவதாக புள்ளிவிபங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மூன்றில் இரண்டு மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும் இவ்வாறான மருத்துவ முகாம்களை கிராமங்களில் நடாத்துவதானது பாராட்டப்படவேண்டியதொன்றாகும் என தெரிவித்தார்.

1916 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இந்தபாடசாலை ஆரம்பத்தில் புதுக்குளம் குளத்திற்கு அருகாமையில் இயங்கிவந்த நிலையில் 1960 களில் புதுக்குளம் சாஸ்திரிகூழாங்குளம் சந்திக்கு இடமாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஓன்று ஏ தரத்திலான இந்தப்பாடசாலை வவுனியா வடக்கு கல்விவலயத்தின் முதன்மையான பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

mb-6 mb-4

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *