Search
Tuesday 23 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கருணாநிதியை பார்க்க படையெடுக்கும் திமுகவினர்

கருணாநிதியை பார்க்க படையெடுக்கும் திமுகவினர்

01:00 மணி

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த திமுக சீனியர் தலைவர்கள் மருத்துவமனைக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். பொன்முடி, துரைமுருகன், ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு ஆகியோர் மருத்துவமனைக்கு உடனடியாக வந்தனர்.

12:30 மணி

தற்போது, திமுக எம்.எல்.ஏவும், துணை பொது செயலாளருமான துரைமுருகன், மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று இருக்கிறார்.

12:04 மணி

காவேரி மருத்துவமனை நிர்வாகம், தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில், ‘திமுகவின் தலைவரும், தமிழக முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக , சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.தொற்றை சரிசெய்வதற்கான சிகிச்சைகள் தரப்படுகிறது. மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

11:58 மணி

தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியைப் பார்க்க டி.ஆர்.பாலு மருத்துவமனைக்கு வந்து இருக்கிறார். 

11:30 மணி

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, சளி தொந்தரவு அதிகரித்ததன் காரணமாகவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் 1-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, கடந்த 7-ம் தேதி  உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இப்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *