Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

T20 உலகக் கிண்ண போட்டிகள் இம்முறை நடக்குமா?

T20 உலகக் கிண்ண போட்டிகள் இம்முறை நடக்குமா?

அவுஸ்திரெலியாவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ரி-20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பாக தொடர்ந்தும் சர்வதேச கிரிக்கெட் சபை கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.
இம்முறை உலக கிண்ண ரி-20 கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரெலியாவில் ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தற்போது உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோன வைரஸ் தொற்று நிலைமையில் இந்த போட்டியை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி நேற்றைய தினத்தில் அதிகாரிகளுக்கிடையே விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அந்த போட்டிகளை நடத்த முடியுமா? எனபது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் கலந்துரையாடி முடிவெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை கொரோனா அச்சுறுத்தலால் இந்த வருடத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பல போட்டிகளை ஒத்தி வைப்பதற்கும் , இரத்துச் செய்வதற்கும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *