செய்திகள்

செய்தியை ஒளிபரப்பாமலிருக்க சுயாதீன ஊடகவியலாளரிடம் பேரம் பேசிய வர்த்தகர்

அட்டன் நகரில் தனது புதிய கட்டிடம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகள் பற்றிய செய்திகளை தொலைகாட்சியில் ஔிபரப்பாமலிருக்கவும் பத்திரிகையில் செய்திகளை பிரசுரிக்காமலிருக்கவும் சுதந்திர ஊடகவியலாளரிடம் ஒரு வர்த்தகர் பேரம் பேசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தனது கட்டிடத்தின் முன்பாக இருக்கும் அதிக வலு கொண்ட மின்சார கட்டமைப்பை வேறொருவரின் காணிக்கு இடமாற்றம் செய்த போது ஏற்பட்ட சர்சையையடுத்து குறித்த ஊடகவியலாளர் அவ்விடத்திற்கு செய்தி சேகரிக்கு சென்றுள்ளார்.

அச்சந்தர்ப்பத்தில் அவரை அணுகிய வர்த்தகர் இதை செய்தியாக போட வேண்டாம் என்றும் அவரை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அலுவலகத்தில் வந்து கவனித்துக்கொள்வதாகவும் என்ன உதவி வேண்டுமானாலும் தான் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு அந்த ஊடகவியலாளர் இப்படியான கதைகளை தன்னிடம் கதைக்க வேண்டாம் என்றும் ஊடகவியலாளர்களை பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்ற எண்ணத்தை கைவிடும் படியும் சமூகத்திற்கு தீங்கு ஏற்படும் எந்த சம்பவத்தையும் அதற்குக்காரணமாக எவர் இருந்தாலும் தான் அதை செய்தியாக ஒளிபரப்புவது மட்டுமன்றி பத்திரிகைக்கும் எழுதுவேன் என்று கூறியதுமட்டுமல்லாது தமது கடமைக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

மேலும் வர்த்தகர் தன்னுடன் உரையாடியதை கையடக்கத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.