செய்திகள்

செல்வத்தை போன்று அதிகாரத்தை பகிர்தளிக்கும் திருப்தியை அனுபவிக்கின்றேன் : ஜனாதிபதி

செல்வத்தை போன்று அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் போது கிடைக்கும் மனத் திருப்தியை தான் தற்போது அனுபவித்துக்கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடவத்தை ஸ்ரீ விம்பாராம விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செல்வத்தை போன்று அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் போது கிடைக்கும் மனத் திருப்தியை தற்போது நான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன். ஜனாதிபதியின் அதிகாரங்கள் பாராளுமன்றத்துக்கும் மற்றும் சமூகத்துக்கும் பகிர்ந்தளிப்பதனூடாக பௌத்த தர்மத்தின் பொது தன்மையை முன்னெடுத்து கொண்டு செல்ல முடிந்துள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.