செய்திகள்

செவ்வாயில் மனிதனா? நாசா வெளியிட்ட படங்கள்

செவ்வாய் கிரகத்திலே வேறு உயிர்கள் வாழ்கின்றனவா என்ற கேள்விக்கு நீண்ட காலமாக விடைக்கான முடியாமல் இருந்து வந்திருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் வெண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் செவ்வாயில் வேறு உயிர்கள் வாழக்கூடுமோ என்ற சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது. காரணம், நாசா செவ்வாய்க்கு அனுப்பி யிருக்கும் கியூரியோசிட்டி என்ற ரோபோ அனுப்பியிருக்கும் படங்களில் மனிதனைப் போன்ற உருவம் கொண்ட ஒரு விம்பம் கியூரியோசிட்டி ரோபோவில் ஏதோ செய்துகொண்டிருப்பது போன்ற தோற்றம் பதிவாகியிருக்கிறது.

இந்தப் படங்களில், யாரோ ஒருவர் கியூரியோசிட்டி ரோபோவை பழுது பார்ப்பது போல தென்படுகிறது. இந்த உருவம் தலையில் எந்த தலைக் கவசமும் அணியவில்லை என்பது அந்த உருவத்தின் தலைமயிர் தெரிவதிலிருந்து புலனாவதாகவும் அந்த உருவத்தின் பின்பக்கத்தில் ஒரு காற்றுத் தாங்கியும் உடலைப் போர்த்தி ஒரு கவசம் தென்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தற்போது இந்த படங்கள் பறக்கும் தட்டுக்களை கண்காணிக்கும் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சிலர் இந்த படங்கள் செவ்வாயில் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரம் என்றே கூறுகிறார்கள். இருந்தாலும் நாசா விஞ்ஞானிகள் போதிய ஆதாரம் எதுவும் இன்றி இவ்வாறு குருட்டுத்தனமாக கற்பனை செய்யக்கூடாது என்று கூறுகின்றனர். கடந்த டிசம்பர் மாதம், கியூரியோசிட்டி ரோபோவின் மேல் உள்ள கருவி ஒன்று செவ்வாயின் தரையில் மெதேன் வாயுக் கதிர்களை அடையாளம் கண்டிருந்தது. இது செவ்வாயின் தரையில் பற்றீரியா போன்ற உயிர்கள் வாழ்வதன் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது இந்த படங்கள் வெளிவந்திருக்கின்றன.

இதேவேளை, செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்யும் தனது அடுத்த நடவடிக்கையாக நாசா உலங்கு வானூர்திகளை அனுப்பவிருக்கிறது. தரையில் இருந்து தன்னியக்க கருவி மூலம் கட்டுப்படுத்தக் கூடிய இந்த உலங்குவானூர்திகளை செவ்வாய்க்கு அனுப்புவது ஆபத்து நிறைந்தது என்ற போதிலும் இதன்மூலம் பெரும் பலாபலன்களை அடைய முடியும் என்று நாசா கருதுகிறது. பூமியில் இருந்து நாசா மிகவும் சமகாலத்தில் தன்னியக்க கருவி மூலம் உலங்குவானூர்திகளை கட்டுப்படுத்துவது கடினம். இருந்தாலும் , அதனை சாத்தியமாகும் முழு முயற்சிகளில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

Rover

mars-heli-590x330

Heli