செய்திகள்

சைபர் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்த பங்களாதேஷ் அதிகாரிகள் இலங்கை வருகிறார்கள்

சைபர் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பங்களாதேஷைச் சேர்ந்த விசாரணையாளர்கள் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் நியூயோர்க்கிலுள்ள பெடரல் ரிசேர்வ் வங்கிக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்று ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.
பங்களாதேஷின் வெளிநாட்டுக் கையிருப்பிலிருந்து 81 மில்லியன் டொலரை திருடியமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பங்களாதேஷுக்கு உதவ எவ்.பி.ஐ. இணங்கியுள்ளது. இதனை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷின் மத்திய வங்கி அதிகாரிகள் இந்தக் கொள்ளைக்கு உதவியதாக அந்நாட்டு நிதியமைச்சர் குற்றம் சாட்டிய சில நாட்களின் பின்னர் இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாக்காவிலுள்ள எவ்.பி.ஐ. அதிகாரியொருவர் பங்களாதேஷ் குற்ற விசாரணைத் திணைக்களத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடத்தியுள்ளார். அச்சந்திப்பின் போது விசாரணைக்கு உதவுவதற்கு அவர்கள் முன்வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
“எவ்.பி.ஐ. மற்றும் சி.ஐ.டி. நாடு கடந்த ஏற்பாடு செய்யப்பட்ட குற்றச் செயல் தொடர்பாக ஒன்றுசேர்ந்து செயற்படுவதற்கு இணங்கியுள்ளன. இதில் நாடு கடந்த குற்ற கட்டமைப்புகள் சம்பந்தப்பட்டுள்ளன என்று பங்களாதேஷின் குற்ற விசாரணைத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஸைபுல் அலாம் ஏ.எவ்.பி. க்கு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக எவ்.பி.ஐ.யிடமிருந்து உடனடிக் கருத்து வெளிப்பட்டிருக்கவில்லை. ‘
கணினியில் ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்வோர் (ஏச்ஞிடுஞுணூண்) பெடரல் ரிசேர்வ் வங்கியில் பங்களாதேஷ் வங்கியின் கணக்கிலிருந்து பணத்தைத் திருடியுள்ளனர். பெப்ரவரி 5 இல் இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது. பிலிப்பைன்ஸிலுள்ள கணக்குகளுக்கு அதனை மாற்றியிருந்தனர். இந்த துணிகரமான சைபர் கொள்ளை பங்களதேஷ் அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 27 பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட அந்நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பின் பாதுகாப்பு தொடர்பாக விசனமும் விழிப்புணர்வும் அதிகரித்திருக்கிறது.
மத்திய வங்கி ஆளுநரும் அவரின் இரு பிரதி அதிகாரிகளும் மற்றும் நாட்டின் வங்கித் துறை உயர் அதிகாரியும் தமது பதவிகளை இழந்துள்ளனர். இந்தத் திருட்டைத் தொடர்ந்து அவர்கள் பதவி விலக நேரிட்டது. இந்த மோசடி தொடர்பான பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் திண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆயினும் உள்ளூர் கணினிக் கொள்ளையர்கள் இந்தத் திருட்டில் சம்பந்தப்பட்டிருக்கும் சாத்தியம் இருப்பதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.
“இந்தக் குற்றச் செயலில் உள்ளூர் ஆட்கள் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாமென நாங்கள் ந்தேகப் படுகிறோம். பெடரல் ரிசேர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட கொடுப்பனவு ஆலோசனைகளில் உள்ளூர் அபிவிருத்தித் திட்டங்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அலாம் தெரிவித்திருக்கிறார். இந்த விடயம் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில உள்ளூர் தொடர்புகள் இதில் இருக்க முடியுமென்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பேட்டியொன்றில் பங்களாதேஷ் நிதியமைச்சர் ஏ.என்.ஏ.முகித் வங்க மொழியிலான தினசரி பத்திரிகையொன்றிற்கு வங்கி அதிகாரிகள் இந்த மோசடியில் 100 சதவீதம் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தார்.
“நிச்சயமாக 100 சதவீதம் அவர்கள்  (சம்பந்தப்பட்டுள்ளனர்) உள்ளூர் ஆட்கள் இல்லாமல் இது சாத்தியமாக இருக்க முடியாது என்று அவர் கூறியிருந்தார். இந்தப் பத்திரிகை பங்களாதேஷில் அதிகளவுக்கு விற்பனையாகின்றது.
இதேவேளை பணப்பரிவர்த்தனைகளை செயற்படச் செய்வதற்கு மத்திய வங்கி அதிகாரிகளிடமிருந்து கை அடையாளங்கள் மற்றும் ஏனைய உயிரியல் ரீதியான தகவல்களை நியூயோர்க்கிலுள்ள வங்கி கோருகின்து. இந்நிலையில் உள்மட்ட உதவியில்லாமல் சைபர் கொள்ளையர்கள் இந்த ஊடுருவல் தாக்குதலை மேற்கொண்டிருக்க முடியாதென தோன்றுவதாக முகீத் கூறியுள்ளார்.
n10