செய்திகள்

சொத்துக்கள் வாங்கியமை தொடர்பில் விமல் வீரவன்சவிடம் விசாரணை

சொத்துக்கள் தொடர்பில் முன்னாள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவிடம் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

விமல் வீரவன்ச சட்டத்தரணி கபில கமகேவுடன், லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு இன்று காலை சமூகமளித்திருந்தார். கடுவெல பிரதேசத்தில் காணிகள் கொள்வனவு, ஹோட்டல் நிர்மானம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விமல் வீரவன்சவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜே.வி.பியும், கடுவல நகரசபையின் நகர பிதா புத்ததாசவும் விமல் வீரசவன்சவிற்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விமல் வீரவன்சவிடம் வாக்கு மூலமொன்று மட்டும் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.