செய்திகள்

சோமவன்சவுடன் யாரும் இணையப்போவதில்லை: ரில்வின் சில்வா

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளருமான  சோமவன்ச அமரசிங்க, தனியாளாகவே கட்சியிலிருந்து விலகிச் சென்றார். அவருடன் தானோ அல்லது வேறு எவருமோ செல்லப்போவதில்லை என்று அக்கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சோமவன்ச அமரசிங்கவை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவித்த சில்வா, சோமவன்சவுடன் சிலர் கட்சியிலிருந்து விலகிச் சென்றதாக செய்தி வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் கூறினார்.

இது இவ்வாறிருக்க, தான் மீண்டும் மக்கள் விடுதலை முன்னணியில் சேர முடியாது என்றும் வாய்ப்பு கிடைத்தால் மற்றொரு கட்சியை  அமைக்கவுள்ளதாகவும் சோமவன்ச அமரசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.