செய்திகள்

சோமவன்சவை மீண்டும் கட்சிக்குள் இழுக்க ஜே.வி.பியினர் தீவிர முயற்சி

ஜே.வி.பியிலிருந்து விலகியுள்ள அந்த கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதற்காக அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை தமது கட்சிக்குள் எவ்வித பிளவுகளும் கிடையாது எனவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

தான் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை அமைக்கப் போவதாக சோமவன்ச நேற்று முன்தினம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.