செய்திகள்

சோமவன்ச அமரசிங்க ஜே.வி.பியிலிருந்து விலக தீர்மானம்

ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பெலவத்தை பகுதியில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

கட்சியின் சில விடயங்களுக்கு தன்னால் இணங்க முடியாதெனவும் இதனால் கட்சியிலிருந்து விலக தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.