செய்திகள்

சோமவன்ச உண்ணா விரத போராட்டத்தில்

ஜே.பி.யிலிருந்து விலகிய அந்த கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று காலை முதல் உண்ணா விரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.

கடந்த ஜனவரி 8ம் திகதி அதிகாலை மஹிந்த ராஜபக்ஷ தோல்வியுற்ற பின்னர் அலரி மாளிகையில் இடம்பெற்றதாக கூறப்படும் சூழ்ச்சிகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியே அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.