செய்திகள்

சோமவன்ச ‘ரக்ட்டர்’ வண்டியூடாக அரசியலுக்குள் வர முயற்சி

ஜே.வி.பியிலிருந்து விலகிய அந்த கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஜனசெத பெரமுன கட்சியூடாக மீண்டும் அரசியலுக்கு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அந்த கட்சியின் உரிமையளரான பத்தரமுல்லே சீலரட்ண தேரருடன் அண்மையில் சோமவன்ச கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னர் தனது கட்சியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் சீலரட்ன தேரர் அறிவித்திருந்த போதும் மஹிந்த அதற்கு பதிலளித்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் சோமவன்ச கட்சியிலிருந்து விலகிய பின்னர் அவருக்கும் அதேபோன்ற அறிவிப்பை விடுத்திருந்தார்.
இவ்வாறான நிலைமையிலே சோமவன்சவுக்கும்; சீலரடன தேரருக்கும் இடையில் சந்திப்பு நடந்துள்ளது.
இதேவேளை ஜனசெத பெரமுனவின் சின்னம் உழவு இயந்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.