செய்திகள்

சோமாலியாவில் அல்சகாப் தாக்குதலில்17 பேர் பலி

சோமாலிய தலைநகர் மொகடிசுவில் உள்ள அரசகட்டிடமொன்றின் மீது அல்சகாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கல்வியமைச்சும் ஏனைய முக்கிய அமைச்சுகளும் அமைந்துள்ள பகுதி மீது காரை பயன்படுத்தி தற்கொலை தாக்குதல் இடம்பெற்றதாகவும், அதன் பின்னர் தீவிரவாதிகள் துப்பாக்கி பிரயேகத்தினை மேற்கொண்டதாகவும் இதன்போது 17 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
குறிப்பிட்ட பகுதியில் பல உடல்கள் காணப்படுவதாகவும்,காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு ஏற்றிச்செல்லும் அம்புலன்ஸ்களின் சத்தங்களை கேட்க முடிவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன,