செய்திகள்

சோமாலியா அகதிகளை வெளியேற்ற ஐ.நா.விற்கு கென்யா கோரிக்கை

அகதிகளாக இருக்கும் 6 லட்சம் சோமாலியர்களை 3 மாதங்களில் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.விற்கு கென்யா வேண்டுகோள் விடுத்துள்ளது.

சோமாலியா நாட்டில் கடந்த 1991-ம் ஆண்டு உள்நாட்டு போர் மூண்டது. இதன் காரணமாக ஏராளமானவர்கள் அண்டை நாடான கென்யாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இவர்களின் எண்ணிக்கை சுமார் 6 லட்சமாகும்.

ஐ.நா சபை உதவியுடன் இந்த அகதி முகாம்கள் கண்காணிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தங்கள் நாட்டில் உள்ள அகதிகளை 3 மாத காலத்திற்குள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கென்யா அரசு ஐ.நா.வை கேட்டுக்கொண்டு உள்ளது.

இது குறித்து பேசிய அந்நாட்டு துனை அதிபர் வில்லியம் ரூடோ, ஐ.நா தவறும்பட்சத்தில் நாங்களாகவே அவர்களை வெளியேற்றி விடுவோம் என தெரிவித்துள்ளார்.