செய்திகள்

ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என ராஜதந்திரிகளுக்கு மைத்திரி உறுதியளிப்பு

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக இராஜதந்திரிகளுக்கு உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் இன்று இராஜதந்திரிகளை சந்தித்த வேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நான் 8 ம் திகதி தேர்தலில் வெற்றிபெற்றால்,நீதியான ஜனநாயம் நிலவும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு அவசியமான கட்டமைப்புகளுக்கு மீண்டும் புத்துயுர்கொடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவேன்,அரச ஊடகங்கள் அரசாங்கத்தின் ஊதுகுழலாக பயன்படுத்தப்படுவதை நிறுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சர்வதேச சமூகத்தின் முன்னர் தலைநிமிர்ந்து நின்ற காலமொன்று முன்னர் காணப்பட்டது,எனினும் அது தற்போது தனது நம்பகத்தன்மையை இழந்துள்ளமை கவலையளிக்கின்றது.
நான் 18 வது திருத்தத்தை நீக்குவேன்,என்றும் அவர் இராஜதந்திரிகளுக்கு உறுதியளித்துள்ளார்.