செய்திகள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் ஜனாதிபதிக்கு முன்மொழிவு

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர்  ஜனாதிபதிக்கு தமது முன்மொழிவினை அனுப்பியுள்ளனர்.

1988 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் 5/6 பெரும்பான்மையுடன் 13 ஆவது  அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

13 ஆவது  அரசியலமைப்பு திருத்தம் ஏற்கனவே  அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு கருத்துகளைக் கோர வேண்டிய அவசியமில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபைகளில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட  அதிகாரங்களை மீண்டும் நிறுவுவதற்கும், காணி, பொலிஸ், நிதி, நிர்வாக அதிகாரங்களுடன் 13  ஆம் திருத்தத்தினை அதன் அசல் வடிவில் நடைமுறைப்படுத்துவதற்கும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் முன்மொழிவதாக அவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

-(3)